Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிமருந்து பொருட்களை ஆன்லைனில் வாங்கிய முபின்! – காவல்துறை அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (09:16 IST)
கோவை கார் வெடிப்பில் இறந்த முபினின் வீட்டில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதற்கான வேதியல் பொருட்களை ஆன்லைனில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் முபின் என்ற நபர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான முபினின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வரும் நிலையில் தேசிய புலனாய்வு முகமையும் இது தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருகிறது. இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

ALSO READ: மது அருந்தி வந்தால் கடும் நடவடிக்கை! – போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

இந்நிலையில் தற்போது போலீஸார் வெளியிட்டுள்ள தகவலில் முபின் வீட்டில் மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் முபின் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கும்போது விரிவான தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments