Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய பொறுப்பு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:49 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் வெளிநாட்டு நிதி உதவியோடு விரைவில் இந்த பணி தொடங்கும் என்றும் கூறப்பட்டது 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்களுக்கு இது குறித்த முக்கிய பதவி ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களில் எம்பி சு வெங்கடேசன் அவர்கள் விலகிய நிலையில் தற்போது ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து விரைவில் இதன் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments