Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி கனிமொழிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! – சாத்தான்குளம் பிரச்சினை காரணமா?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (10:36 IST)
திமுக எம்.பி கனிமொழிக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை காவல்துறை திரும்ப பெற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சி உறுப்பினரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து வருகிறார். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இறப்புக்கு காரணமான காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியை சந்தித்து எம்.பி கனிமொழி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு நியமிக்கப்பட்டிருந்த காவலர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது கனிமொழி நடவடிக்கை எடுக்க மனு அளித்ததன் விளைவாகவே போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கனிமொழி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments