Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முகம் சுப்பையா நியமனம் ... எம்.பி. ஜோதிமணி கண்டனம்

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முகம் சுப்பையா நியமனம் ... எம்.பி.  ஜோதிமணி கண்டனம்
, புதன், 28 அக்டோபர் 2020 (23:33 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முகம் சுப்பையா நியமனம் செய்ததற்கு கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முகம் சுப்பையா நியமனம் செய்ததற்கு கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனம்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஜோதிமணி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நியமன குழு மற்றும் பாலக்காடு எய்ம்ஸ் மருத்துவமனையில் குழுவில் அகில பாரத் வித்யா பர்ஷத் தேசிய தலைவர் சண்முகம் சுப்பையா நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவரை, இழிவாக நடந்து கொண்டவரை குழுவில் நியமித்து இருப்பது கண்டிக்கதக்கது. பெண்களுக்கு எதிராக நடந்து கொள்பவர்களுக்கு பா.ஜ.க கட்சியினரை உயர் பதவி அளிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பா.ஜ.க கட்சி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஹர்ஷத் வர்தனிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டர் வலைதளம் அரைமணி நேரம் முடக்கம் ! பயனர்கள் சிரமம்...