Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூவத்தூர் பேரம்: திருநெல்வேலி அல்வா கொடுத்து சரவணனை கவுத்த மூன் டிவி!

கூவத்தூர் பேரம்: திருநெல்வேலி அல்வா கொடுத்து சரவணனை கவுத்த மூன் டிவி!

Advertiesment
கூவத்தூர் பேரம்: திருநெல்வேலி அல்வா கொடுத்து சரவணனை கவுத்த மூன் டிவி!
, வெள்ளி, 16 ஜூன் 2017 (13:36 IST)
அதிமுகவின் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் பேரம் குறித்து பேசிய வீடியோவை மூன் டிவி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் உதவியுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
தமிழக அரசியலிலும், சட்டசபையிலும் புயலை கிளப்பி வரும் இந்த வீடியோவை எப்படி எடுத்தோம் என்பதை மூன் டிவியின் நிர்வாக இயக்குனர் ஷநவாஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.
 
சரவணன் ஒரு சிவில் இன்ஜினியர் என்பதால் அவரை கட்டுமான பணி பற்றிய ஒரு ஆலோசனைக்கு அழைப்பதாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வரவழைத்துள்ளனர் அவர்கள்.
 
அலுவலகத்தில் வந்த சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று அவருடன் கேஷுவலாக பேசி தகவலை பெற்றுள்ளனர். சரவணன் வருவது பேசுவது எல்லாமே அவர்களது அலுவலக கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
ஏப்ரல் 1-ஆம் தேதி அதாவது முட்டாள்கள் தினத்தில் முதன் முதலில் மூன் டிவி அலுவலகத்துக்கு வந்த சரவணன் அதன் பின்னர் 6-ஆம் தேதியும் வந்துள்ளார். பின்னர் திருநெல்வேலி செல்வதாக கூறிய சரவணனுடன் மூன் டிவியின் நிர்வாக இயக்குனர் ஷநவாஸும் சென்றுள்ளார்.
 
திருநெல்வேலியில் உள்ள தங்கள் செய்தியாளரிடம் சொல்லி இரண்டு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கி எம்எல்ஏ சரவணனுக்கு கொடுத்ததாக கூறி சிரிக்கிறார் ஷநவாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் மோசடியில் முதலிடம் - சென்னையில் ஒரே ஆண்டில் ரூ.16 கோடி சுருட்டல்