Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மநீம பொருளாளர் ரூ.80 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிப்பு: இதுதான் மாற்றமா?

மநீம பொருளாளர் ரூ.80 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிப்பு: இதுதான் மாற்றமா?
, வெள்ளி, 19 மார்ச் 2021 (13:22 IST)
சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்ததாக தகவல்கள் வந்தன. குறிப்பாக திமுக மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது 
 
இவற்றில் வருமான வரி சோதனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்தமான பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூபாய் 80 கோடி அளவிற்கு அவருடைய வருமானம் மறைக்கப்பட்டுள்ளதும், அந்த வருமானத்திற்கு அவர் வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
அதிமுக திமுக போன்றவை ஊழல் கட்சிகள் என்றும் தங்களது கட்சி ஊழலில் இருந்து வேறுபட்டு மாற்றத்தை கொண்டு வரும் கட்சி என்றும் கமலஹாசன் கூறிவரும் நிலையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த பொருளாளர் ரூபாய் 80 கோடி அளவுக்கு வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமகவில் இருந்து விலகிய ஞானசேகரன், திமுகவுக்கு ஆதரவு!