Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தையர் தினம்; தனது அப்பா போட்டோவை ஷேர் செய்து நெகிழ்ந்த முதல்வர்!

Advertiesment
MK Stalin
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (13:11 IST)
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வளர்த்தெடுத்து சமூகத்தில் அந்தஸ்தான இடத்தில் நிறுத்துவதில் தாய்க்கு இணையாக தந்தையின் பங்கும் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட தந்தைகளை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தந்தையர் தினத்தில் மறைந்த முன்னாள் முதல்வரான தனது தந்தை கருணாநிதி தனக்கு முத்தமிடும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! #FathersDay-இல் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் தகவல்