Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:58 IST)
சமீப காலமாக திமுகவினர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: பெட்ரோல் குண்டுகளை வீசுவது இஸ்லாமியர்களா? பாஜகவா? - சீமான் கேள்வி

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் அளிக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம். நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம். திமுக மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகளை திரித்து வெளியிடக்கூடிய செயல் தொடர்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலகம் விளைவிக்க நச்சு சக்திகள் முயற்சிக்கின்றன. திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள் பேசியதை தவறான பொருள்படும்படி வெட்டி, ஒட்டி வெளியிடுகிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படும் நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. மக்களுக்கான பணியை மட்டும் கவனிப்போம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments