Publish Date: Sun, 25 Sep 2022 (15:45 IST)
Updated Date: Sun, 25 Sep 2022 (15:46 IST)
திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நான் இணையம் அளவிற்கு பாஜக அல்லது அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நான் எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்றும் நான் இணையும் அளவிற்கு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்
40 ஆண்டுகளாக திமுகவிலிருந்து இருந்துள்ளேன் என்றும் நிச்சயம் அதிமுகவில் இணைய மாட்டேன் என்றும் அதிமுகவில் இணையப் போவதாக வெளிவந்த தகவலை மறுக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்