Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்டமசோதா பேரவையில் தாக்கல்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:44 IST)
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

 
நேற்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும். தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும். நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என நேற்று கூறியிருந்தார். 
 
அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஆம், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 
 
தொடக்கம் முதலே நீட் நுழைவுத்தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. திமுக பெறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடங்கியுள்ளோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments