Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சினை எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! – எடப்பாடியாருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:03 IST)
தமிழக முதலமைச்சராக பதவி வகுக்கும் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை குறித்து 15 நாட்களில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “என்னுடைய தொகுதியானாலும், எதிர்கட்சி தலைவரின் தொகுதியானாலும், முதல்முறை எம்.எல்.ஏ ஆனவரின் தொகுதியானாலும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments