Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் வீடியோவால் பிடிபட்ட மனைவி குழந்தைகளை தவிக்கவிட்ட வாலிபர்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (07:54 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தையையும் தவிக்கவிட்டு மாயமான வாலிபர் ஒருவர் டிக்டாக் வீடியோவால் பிடிபட்டார். இந்த சம்பவம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது
 
 கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் திடீரென மனைவி ஜெயப்பிரதாவையும் இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் ஜெயப்பிரதா போலீசில் புகார் செய்தார். போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் டிக்டாக் வீடியோவில் சுரேஷ் இருப்பதை அவரிடம் காண்பித்தார். அந்த வீடியோவை ஜெயப்பிரதா போலீசாரிடம் காண்பிக்க, போலீசார், அந்த டிக்டாக் வீடியோவை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் சுரேஷ் ஓசூரில் ஒரு திருநங்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் ஓசூர் சென்ற போலீசார் சுரேஷை அழைத்து வந்து அவருக்கு புத்திமதி கூறி மனைவி ஜெயப்பிரதாவுடன் சேர்த்து வைத்தனர். டிக்டாக் வீடியோவால் காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments