Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழாயடிச் சண்டை :அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி

குழாயடிச் சண்டை :அண்ணனின்  மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி
, திங்கள், 1 ஜூலை 2019 (16:35 IST)
நம் தமிழகத்தில் என்றுமில்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் இப்போது  தலைவிரித்து ஆடுகிறது. இந்த தண்ணீர் பிரச்சனை தமிழகத்தில் மட்டுமா என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த பிரச்சனைகள் பூதாகரமாகி  வெடித்துவருகின்றன. இந்நிலையில் மும்பை பகுதியில் தண்ணீர் பிரச்சனையில் சொந்த அண்ணன் மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பொதுக்குழாயில் மக்கள அனைவரும் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு குடும்பத்தைசேர்ந்த அண்னிக்கும் கணவரின் தம்பிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. ஒருகட்டத்தில் தண்ணீர் பிடிக்க விட மாட்டேன் என்று அண்ணி கூற... அது முற்றி சண்டையானது. அதனால் கோபமடைந்த தம்பி அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
 
பின்னர் தன் மனைவியை கொன்ற தம்பி மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
தலையெடுத்திருக்கும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிட்நைட்டில் உலவும் மர்ம நபர்; ஆட்களை கண்டதும் எஸ்கேப்!