Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்; சூரப்பா பயப்பட வேண்டாம்! – அமைச்சர் அன்பழகன்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (12:39 IST)
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ள நிலையில் சூரப்பா இதுகுறித்து அஞ்ச தேவையில்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் மற்றும் பணிநியமன முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரனை கமிஷம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்த விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்ட சூரப்பா பதவி விலக வேண்டுமென மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான ஹேஷ்டேகுகள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன் “விசாரணை கமிஷன் அறிக்கை அடிப்படையிலேயே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூரப்பா நேர்மையானவராக இருந்தால் விசாரணை கமிஷனை எதிர்கொண்டு தான் நேர்மையானவர் என நிரூபிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஒருவர் மீது புகார் எழுந்தவுடன் அவரை பதவி விலக சொல்வதே ஸ்டாலிக்கு வேலையாய் போய் விட்டது. தானும் ஊருக்கு இருக்கிறேன் என காட்டிக்கொள்ள இவ்வாறாக அவர் செய்கிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments