Publish Date: Mon, 16 Nov 2020 (10:42 IST)
Updated Date: Mon, 16 Nov 2020 (11:09 IST)
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிய உள்ளது. இதையடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் திருத்தம் இருப்பவர்கள் தெரிவித்தால் ஜனவரி 5 ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.