Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளி மாணவர்கள் நிலமை என்ன? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:25 IST)
கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களின் நிலைமை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதுடன், பள்ளியும் சூறையாடப்பட்டது.

இதுகுறித்த விசாரணைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் கள்ளக்குறிச்சி சென்று ஆய்வு நடத்த உள்ளேன்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி இறப்பு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments