Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்: இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:22 IST)
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சஸ்பென்ஸ் நீடித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த பின்னர் உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் குஜராத் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன
 
ஆனால் 12ஆம் வகுப்பு வகுப்பு தேர்வு குறித்து கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின் முடிவை தெரிவிப்போம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஏற்கனவே பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடந்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்ய உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் இந்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் நடந்த விவரங்களை நாளை முதலமைச்சரிடம் அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments