Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 February 2025
webdunia

மிக்ஜாம் புயல்: ஆந்திராவில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

Advertiesment
cyclone
, திங்கள், 4 டிசம்பர் 2023 (18:33 IST)
மிக்ஜாம் புயல் தீவரமடைந்துள்ள நிலையில், ஆந்திரா- நெல்லூர் அருகேயுள்ள கிருஸ்ணப்பட்டினம் துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாகியுள்ளதால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தன்னார்வ  நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில், மிக்ஜாம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெதுவாக வட திசையில் நரகத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த 6 மணி   நேரத்தில் மழை குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 100 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், முன்னதாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஆந்திரா- நெல்லூர் அருகேயுள்ள கிருஸ்ணப்பட்டினம் துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது பணியைத் தொடங்கிய ஆதித்யா எல் 1- இஸ்ரோ