அணையை திறப்பதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அணையின் சாவி மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகார்ஜுனா சாகர் அணையை திறப்பதில் தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசுகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. தெலுங்கானா அரசால் பூட்டப்பட்ட அணை கேட்டின் பூட்டுகள் ஆந்திர அரசு அதிகாரிகளால் உடைக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அணையின் மொத்தமுள்ள 29 மதகுகளில் ஒன்று முதல் 13 மதகுகள் தெலுங்கானாவுக்கும், மீதமுள்ளவை ஆந்திராவுக்கும் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அணை பராமரிப்பு, நிர்வாகம் ஆகியவை தெலுங்கானா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இன்று அணையை திறப்பதில் ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் இரு மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது