Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈபிஎஸ் இல்லத்தில் மீண்டும் ஆலோசனை!

Advertiesment
ஈபிஎஸ் இல்லத்தில் மீண்டும் ஆலோசனை!
, திங்கள், 4 ஜூலை 2022 (10:29 IST)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இதற்கிடையே ஓபிஎஸ் அதிமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து அவரை நீக்க ஈபிஎஸ் அணி முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் அதிமுக கட்சியே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இதற்காக சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவன் குறுக்க போய்றாதீங்க சார்... Food Delivery-க்கு குதிரையில் போன Swiggy Boy!