Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளில்லாத சொத்து… ஆட்டய போட பிளான் – வசமாக சிக்கிய நபர்!

ஆளில்லாத சொத்து… ஆட்டய போட பிளான் – வசமாக சிக்கிய நபர்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (11:59 IST)
கன்னியாகுமரியில் 80 வயது மூதாட்டியை சொத்துக்காக அவரது வீட்டிலேயே பூட்டிவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த கமலாபாயின் மகள் விமலா சாந்தா. கமலா பாய்க்கு 82 வயது ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா சாந்தா உயிரிழந்துவிட, அவருடன் கல் குவாரியில் வேலை பார்த்த யுகேந்திரன் என்பவர் கமலா பாயை பார்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பெயரில் லட்சக் கணக்கில் சொத்து இருப்பதை அறிந்த யுகேந்திரன் கமலா பாயை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டைப் பூட்டி வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் கொடுத்துள்ளார்.

இந்த கொடுமை அந்த தொகுதி எம் எல் ஏ மனோதங்கராஜ் மூலமாக காவல்துறை காதுகளுக்கு செல்ல, போலிஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி பூட்டிய வீட்டின் ஓரத்தில் கிடந்துள்ளார். அதன் பின்னர் யுகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், தான் தான் மூதாட்டியை கவனித்துக் கொண்டதாக சொல்லியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கும் முனைப்புகளில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலுக்கு போகணுமா? டோக்கன் வாங்கிட்டு வாங்க! – அறநிலையத்துறை புதிய ரூல்!