Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்

மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்
, புதன், 2 செப்டம்பர் 2020 (11:39 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவால் இந்தியாவில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், உள்பட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களில் ஒரு சில முதலமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு முதலமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார் என்றும் தகவல் வெளிவந்தூள்ளது. மேலும் தன்னுடன் தலையை தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள கோவா முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஒரு சில முதல்வர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு முதலமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட சீக்கிரம் சிக்னல் போடுங்கப்பா! ரூல்ஸை ஃபாலோ பண்ணும் நாய்!