Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் – அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் எடுத்த முடிவு !

ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் – அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் எடுத்த முடிவு !
, புதன், 20 நவம்பர் 2019 (14:33 IST)
தான் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் அது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பெராணி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர் நேற்று முன் தினம் கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டில் இருந்த ரஸ்க் ஒன்றில்  கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உற்றுப்பார்த்ததில் அது இரும்பு போல்ட் எனத் தெரிந்துகொண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக இது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர் இது சம்மந்தமாகப் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடமும் அந்த ரஸ்க்கில் உள்ள இரும்புத்துண்டைக் காட்டினார். குழந்தைகள் சாப்பிடும் உணவான ரஸ்க்கில் இப்படி அலட்சியமாக இருக்கும் நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி அவர் வற்புறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுக்கு அழைத்து பெண்ணின் மனதை மாற்றிய பெற்றோர் – விரக்தியில் கணவன் எடுத்த முடிவு !