Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் !

Advertiesment
ரூ 9.25 லட்சம் மதிப்பிலான  விலையில்லா  கறவை  மாடுகளை வழங்கிய அமைச்சர் !
, திங்கள், 18 நவம்பர் 2019 (21:14 IST)
கரூர் அடுத்த ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில்  50  பயனாளிகளுக்கு ரூ 9.25 லட்சம் மதிப்பிலான  விலையில்லா  கறவை  மாடுகளை  தமிழக போக்குவரத்துத்துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  வழங்கினார்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.19.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை  போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர்   மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன்,  தலைமையில்  வழங்கினார். இந்நிகழ்ச்சியில்., தமிழக  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது.,  கரூர்  மாவட்டத்தில் முதன் முறையாக  ஏழை.,  எளிய  கிராமப் புற பெண்களுக்கு  விலையில்லா  கறவை மாடுகள்  வழங்கப்பட்டது.

கிராமப்  பொருளாதாரம்  என்பது  மிக  முக்கியமானது.  கிராமப் பொருளாதாரம்  வலுவாக இருந்த  காரணத்தால் தான்.,  உலகப் பொருளாதார  மந்த நிலை  இருந்த போது கூட
இந்தியா  அதிலிருந்து  தற்காத்துக் கொண்டது.  130 கோடி  மக்கள்  தொகை  உள்ள  நாட்டில் வேளாண்  தொழில்  என்பது.,  வாழ்வாதாரத்திற்கான அடிப்படையான தொழிலாக இருக்கின்றது . அந்த வேளாண் தொழிலுக்கு உபதொழிலாக மாடு, ஆடு, கோழி  வளர்ப்பு தொழில்கள்  இருக்கின்றது.  பெண்களின் நலனுக்காகவும்.,  அவர்களின்  பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழை எளிய கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் இன்று கரூர் மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு ரூ.38,500 வீதம் மொத்தம் ரூ.19.25லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 520 பயனாளிகளுக்கு ரூ.86லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'10 ஆம் வகுப்பு' படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை .. ரூ. .69 ஆயிரம் வரை சம்பளம் ! இளைஞர்களுக்கு வாய்ப்பு !