Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய நடத்துனர் – கடலூரில் பதரவைக்கும் சம்பவம் !

பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய நடத்துனர் – கடலூரில் பதரவைக்கும் சம்பவம் !
, சனி, 22 பிப்ரவரி 2020 (08:13 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் பெண் ஒருவரின் மீது நடத்துனர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வடிவேலு என்ற தனியார் பஸ் இயங்கி வருகிறது. இதில் தினமும் வந்து வேலைக்கு செல்பவர் சலோமி எனும் பெண். இவரை அந்த பஸ்ஸின் நடத்துனர் சில காலமாக ஒரு தலையாக காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் வரும் போதெல்லாம் அவருக்கு உட்கார சீட் போட்டுக் கொடுத்து காதல் பாடல்களை ஒலிக்க விட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் ஒருநாள் சென்று தன் ஆசையை சொல்ல, அவர் உங்களிடம் தங்கையை போலதான் பழகினேன் என்றும் எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அவரை பழிவாங்கும் முடிவை எடுத்துள்ளார்.

இதையடுத்து ஒரு கேன் நிறைய பெட்ரோலை எடுத்துகொண்டு சலோமி வேலை செய்யும் கடைக்கு சென்று அவர் மேல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இதில் அவர் உடல் முழுவதும்  காயங்களோடு அலற சுற்றி இருந்தவர்கள் அவர் மேல் இருந்த தீயை அணைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பிக்கப்பார்த்த சுந்தரமூர்த்தியை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இது சம்மந்தமாக போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்கு மிட்டாய்….காசுக்கு பதில் பாலியல் தொல்லை – முதியவரின் லீலை !