Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னுடைய நிர்வாணப்படத்தை இணையத்தில் பார்த்த பெண் – துணிந்து செய்த செயல் !

Advertiesment
தன்னுடைய நிர்வாணப்படத்தை இணையத்தில் பார்த்த பெண் – துணிந்து செய்த செயல் !
, வியாழன், 23 ஜனவரி 2020 (07:47 IST)
தனது முன்னாள் காதலர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதை அடுத்து அவர் மீது புகார் கொடுத்து அவரைக் கைது செய்ய வைத்துள்ளார் ஒரு இளம்பெண்.

விழுப்புரம் அருகே செல்போன் கடை வைத்திருந்த கலையரசன் என்பவரிடம் வேலை செய்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.  கடையில் வேலைப் பார்க்கும் போது இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் கடையில் பெரிதாக வருமானம் இல்லாததால் கலையரசன் கடையை மூடியுள்ளார்.

பின்னர் இருவரும் திருப்பூருக்கு சென்று ஒரே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கலையரசன், தனது காதலியின் நிர்வாணப் படங்களை தனக்கு அனுப்ப சொல்லி நச்சரிக்க ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் அனுப்பிய அந்த பெண் பின்னர் புகைப்படம் அனுப்ப மறுத்துள்ளார். அப்படியானால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என கலையரசன் மிரட்ட அந்த பெண் கலையரசனை பிரிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், தன்னிடம் இருந்த நிர்வாணப் புகைப்படங்களை போலி முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த பெண் போலீஸாரிடம் தைரியமாகப் புகாரளித்தார். புகாரை ஏற்றுக் கலையரசனைக் கைது செய்த போலிஸார் இப்போது கடலூர் சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 16 முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு