Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா - பால்குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Advertiesment
madurai

J.Durai

மதுரை , சனி, 22 ஜூன் 2024 (12:25 IST)
மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 
 
மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல்,பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 
இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 
தொடர்ந்து மூன்றாம் நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேட்டில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக..! அன்புமணி வலியுறுத்தல்..!!