Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:45 IST)
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் “மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் “மாநில அரசுகளில் கல்வி கொள்கையின் அடிப்படையில் புதிய கல்வி திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொள்ள மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து மக்கள்ன் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்வி கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும்” எனவும் கூறியுள்ளார். முதல்வரின் இந்த கருத்துக்கு தமிழக மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் ‘தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வரும் மும்மொழிக் கொள்கை திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments