Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க மறுத்தாலும் உங்க பேச்சு காட்டி குடுத்துட்டு! – ஆ.ராசா VS எச்.ராஜா!

Advertiesment
நீங்க மறுத்தாலும் உங்க பேச்சு காட்டி குடுத்துட்டு! – ஆ.ராசா VS எச்.ராஜா!
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:22 IST)
தாங்கள் இந்து விரோத கட்சி இல்லை என திமுக சாதித்தாலும் அவர்கள் பேச்சு காட்டிக் கொடுத்து விடுவதாக ஆ.ராசாவின் பேச்சை முன்வைத்து விமர்சித்துள்ளார் எச்.ராஜா.

சமீபத்தில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசிய சம்பவத்தில் திமுகவை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தாங்கள் இந்து விரோத கட்சி கிடையாது என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசிய திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக மாநில தேசிய செயலாளர் எச்.ராஜா “இந்து விரோத தீய சக்தி ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் திக திமுக என்று நான் கூறும் போதெல்லாம் ஸ்டாலின் மற்றும் ஆஎ.எஸ்.பாரதி போன்றோர் தாங்கள் இந்து விரோதிகள் அல்ல என்று பசப்பி வந்தனர்.ஆ.ராசா வின் பேச்சு சந்தேகங்களை தீர்த்து விட்டது.நன்றி” என்று கூறியுள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி இருந்தா எப்படி காங்கிரஸை மதிப்பாங்க? – நிர்வாகிகளை கண்டித்த கே.எஸ்.அழகிரி!