Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (14:37 IST)
தமிழகத்தில் ஊரடங்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீடிக்கும் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மே இரண்டாம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் அன்றைய தினம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருப்பதால் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் செல்வதற்கு மட்டும் தடை இல்லை என்றும் முகவர்களுக்கு உணவு வாங்கி செல்வதற்கும் தடை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மே இரண்டாம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு என்றாலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தவிதமான தடங்கலும் இருக்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் முழு ஊரடங்கு தினத்தில் இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும் என்றும் ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகள், கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments