Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் விடுமுறையுடன் ஜனவரி 13ஆம் தேதியும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Holiday

Mahendran

, வெள்ளி, 3 ஜனவரி 2025 (13:35 IST)
ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்குகிறது.
 
இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி தேர்த்திருவிழா மற்றும் 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் ஒரு நாள் கூடுதலாக பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது.. ஆயுத விற்பனையும் செய்தார்களா?