Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உரையை வசிக்காமல் அவையில் இருந்து வெளியேறுவதா?. தமிழக ஆளுநருக்கு வைகோ கண்டனம்..!

governor ragupathi

Senthil Velan

, திங்கள், 12 பிப்ரவரி 2024 (13:20 IST)
தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறி இதை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும் என்று வைகோ கூறியுள்ளார்.
 
webdunia
சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும் தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாங்கள் ஏன் கேட்கக்கூடாது..? பிரேமலதா ஆவேசம்..!