Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.பி நட்டா வீட்டில் கு.க.செல்வம்: பாஜகவில் இணைவது உறுதி?

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:58 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார். 
 
திமுக மற்றும் அதிமுகவில் உள்ள ஒருசில பிரபலங்கலும், வேறு கட்சியில் உள்ள பிரபலங்களும் பாஜகவில் விரைவில் இணைய இருப்பதாகவும் தேர்தல் நெருங்குவதற்குள் பலர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இன்று மாலை இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த மாறலுக்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
அதாவது மறைந்த ஜெ.அன்பழகன் பொறுப்பில் வருவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.   
 
சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் அதிருப்தி அடைந்தனர். இதில் ஒருவர் கு.க. செல்வம். எனவே தான் கு.க. செல்வம் பாஜகவிற்கு மாற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போதைய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெ.பி.நட்டாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார் கு.க.செல்வம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments