விஜய் தப்பு செய்யலைனா ஏன் பயப்படுகிறார்? – கே.டி.ராகவன் கேள்வி!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (09:13 IST)
விஜய்க்கு கே.டி.ராகவன் கேள்வி
வருமானவரி விவகாரத்தில் விஜய் தவறு செய்யவில்லை என்றால் ஏன் சம்மனை ஏற்று விளக்கம் அளிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் குடியுரிமை விளக்க கூட்டம் சென்னை மாங்காட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் குடியுரிமை சட்டம் குறித்த விளக்கங்களை மக்களுக்கு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அமீரின் பேச்சு பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் ”பாஜக கட்சி விஜய்யை கண்டு பயப்படுவதாக அமீர் கூறுகிறார். ஆனால் உண்மையில் அமீர் பாஜகவை கண்டு பயப்படுகிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். வருமானவரித்துறை விவகாரத்தில் விஜய் மடியில் கனம் இல்லை என்றால், பயப்படாமல் வருமானவரித் துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு செல்ல வேண்டியதுதானே” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பாஜகவினர் பலர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்? பாஜகவுக்கு முதல்வர் பதவியா?

1996ல் நரசிம்மராவ் செய்த அதே தவறை செய்தாரா ராகுல் காந்தி? 2026ல் ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. அரசியல் விமர்சகர்கள்..!

28 சீட் வாங்கி, 15ல் ஜெயித்து என்ன சாதிக்க போகிறது காங்கிரஸ்? கடைசி வரை இப்படியே இருக்க போகிறதா?

இலவு காத்த கிளியாக ஏமாந்த தவெக.. காங்கிரஸ் இல்லாத விஜய்யின் அடுத்த திட்டம் என்ன?

நான் வேலைக்காரின்னா என் காலில் விழுந்தது ஏன்?... சசிகலா கோபம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments