Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக செயல்படவில்லை - பொன்.ராதா கிருஷ்ணன் !

Advertiesment
நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக  செயல்படவில்லை - பொன்.ராதா கிருஷ்ணன் !
, திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:02 IST)
Pon Radha Krishnan spoke about vijay

நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அவர் வீட்டில் ஆவணங்கள் மற்றும் பணத்தை கைப்பற்றவில்லை ; ஆயினும் பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் ரூ. 70 கோடிக்கு மேல் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். முப்பது மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அடுத்த நாள் விஜய்’ மாஸ்டர் ’படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
 
அப்போது, திருநெல்வேலியில் உள்ள  மாஸ்டர் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இதனால்தான்  தமிழ்நாட்டில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதில்லை என விமர்சித்தார்.
 
இந்த நிலையில்,  திமுக எம்.பி தயாநிதி மாறன், இன்று பாராளுமன்றத்தில் ரஜினிக்கு சலுகை காட்டிய வருமான வரித்துறை விஜய் மீது நவடிக்கை எடுப்பது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து முன்னாள்  அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளதாவது :
 
நடிகர் விஜய்க்கு எதிரான பாஜக செயல்படவில்லை என தெரிவித்தார். மேலும்,  என்.எல்.சி யில் நடக்கும் படப்பிடிப்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை; இதற்கு அனுமதி வழங்கியதில் தவறு நடத்திருப்பாத தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.499 ஒன்லி... அசத்தும் வோடபோனின் நியூ ரீசார்ஜ்!!