ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை: கட்டுபடுத்த முடியாத கொரோனா!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

சீனாவின் வூகான் நகரிலிரிந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன தேசமே வரலாறு காணாத உயிரிழப்பை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் தங்கள் பிரஜைகளை சீனாவிலிருந்து வெளியேற்றியதுடன், ஹாங்காங் போன்ற தன்னாட்சி நாடுகள் சீனா எல்லையையும் மூடிக்கொண்டுள்ளன. சீன அதிபரும் கொரோனா குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் தலைமறைவாகி விட்டதால் சீன மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

மிக வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் 1011 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தாலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவில் உள்ள மருத்துவ குழுக்களும் மருத்துவ வசதிகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments