சாதி வாரி கணக்கெடுப்பு மக்களை பிளவுபடுத்தும் தவறான நடைமுறை: டாக்டர் கிருஷ்ணசாமி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (12:07 IST)
பாமக உள்பட பல கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் ஆதரிக்கவில்லை என்றும் மக்களை பிளவுபடுத்தும் ஒரு தவறான நடைமுறை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
இட ஒதுக்கீடு மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்க முடியாது என்றும் தூய்மையான அரசால் மட்டுமே எந்தவித பேதமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 
 
ஜாதிவாரி கணக்கெடுப்பு முறை நாட்டு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழக ஆதரிக்கவில்லை என்றும் இது மக்களை பிளவுபடுத்தக்கூடிய தவறான நடைமுறை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்து என்னாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.<>  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?

ஆண்களுக்கும் இலவச பேருந்து.. மகளிருக்கு மாதம் ரூ.2000.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன்.. 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி?

டிரம்ப் வரிவிதிப்பால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குஜராத் மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments