Publish Date: Wed, 27 Sep 2023 (10:45 IST)
Updated Date: Wed, 27 Sep 2023 (10:46 IST)
அதிமுக விலகல் ஈடு செய்ய முடியாத இழப்பு என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணியை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கி வைக்கப்பட்டதை அடுத்து அந்த கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜகவை விலக்கி வைத்தது பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் தான் கூட்டணிக்கு செல்வார் என்றும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.