Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் : ஒப்புக்கொண்ட கோவை புனிதா

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:10 IST)
கோவை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என விடுதி வார்டன் புனிதா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அந்த விடுதியின் வார்டன் புனிதா என்பவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து வார்டன் புனிதா மற்றும் விடுதியின் உரிமையாளர் ஜெகந்தாதன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரும் தலைமறைவாகினர். புனிதா, ஜெகந்நாதன் ஆகிய இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன், ஆலங்குளம் கிணறு ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
அதையடுத்து, கடந்த 1ம் தேதி  வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சரண் அடைந்த புனிதாவிடம் ஜெகந்நாதன் மரணம் குறித்தும் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து போலிசார் விசாரணை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என புனிதா ஒப்புக்கொண்டார் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments