Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு எதிரான குற்றம் - பாஜக முதலிடம்: புள்ளி விவரத்தால் அதிர்ச்சி!

Advertiesment
பெண்களுக்கு எதிரான குற்றம் - பாஜக முதலிடம்: புள்ளி விவரத்தால் அதிர்ச்சி!
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:37 IST)
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் பாஜக முன்னிலை வகிக்கிறது என்ற புள்ளி விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இண்டஹ் தகவல், தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது கட்சியினர் கொடுத்த தகவல்களை வைத்து இதை வெளியிட்டு இருக்கிறது.
 
கட்சியினரின் குற்ற செயல்களை ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது இந்த புள்ளி விவரம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக கட்சியினர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
webdunia
மொத்தமாக இந்தியா முழுக்க 1,580 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் 45 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை ஈடுப்பட்டுள்ளனர். அந்த 45 பேரில் 12 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள்.
 
இதில், வன்புணர்வு செய்தல், கடத்தல், கொலை, வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என அனைத்தும் அடக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியூபாவில் புதிய அதிபர் வேட்பாளர் நியமனம்