நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது.
நிரூபர் ஒருவர் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என கேட்டபோது எனக்கு இரண்டு நிமிஷம் தலையே சுத்திருச்சு என ரஜினி சொன்னதும் நகைப்புக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது இப்படித்தான் உள்ளது என ஒருவர் டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில் தமிழ் இலக்கணம் குறிப்பு வரைக என்ற கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் மிகவும் காமடியாக, தமிழ் இலக்கணத்துக்கு தொடர்பே இல்லாமல் தனக்கு இலக்கணத்தின் மீது உள்ள வெறுப்பையும் தனது சொந்த கதையையும் எழுதியுள்ளான். ஆனால் அதற்கு முழு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஆன்மீக அரசியல் இது மாதிரி தான் என ஒருவர் இதனை கலாய்த்துள்ளார். அதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அருமையான பதிவு நண்பரே என வரவேற்றுள்ளார்.