Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கோபுர வடிவ ஆர்ச் – கி வீரமணி கண்டனம் !

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (10:21 IST)
மதுரைப் பெரியார் பேருந்து நிலையத்தை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர வடிவத்தில் முன்புற முகப்பு வைப்பதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மதுரைப் பெரியார் பேருந்து ரிலையம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்குப் பெரியார் பெயர் சூட்டப்பட்டது. இப்போது மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அதனை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் முகப்பை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுர வடிவில் அமைக்க இருப்பதாக சொல்லப்பட்டு அதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது சம்மந்தமாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ‘பெரியார் பெயரிலான பேருந்து நிலையத்தை, கோயில் கோபுர வடிவத்தில் அமைப்பது எந்த வகையில் சரியானதாகும் ?. இதனால் எதிர்காலத்தில் எப்போதும் சர்ச்சைகளும் விவாதங்களுமே உருவாகும். அதுமட்டுமல்லாமல் மதச்சார்பற்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் மத அடையாளத்தைப் புகுத்துவது சட்டப்படி தவறாகும். அப்படி அதிமுக அரசு இந்த திடட்த்தைக் கைவிடவில்லை என்றால் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments