Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடமே தேட்டை போட்ட பலே திருடன் – மதுரையில் பரபரப்பு

Advertiesment
சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடமே தேட்டை போட்ட பலே திருடன் – மதுரையில் பரபரப்பு
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:59 IST)
மதுரை சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடமே தங்க சங்கிலியை திருடன் ஒருவன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள தந்தி நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவரது மனைவி சாந்தி. பாண்டிதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
சாந்தி அருகிலுள்ள உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு வந்திருக்கிறார். அப்போது ஒரு மர்ம நபர் அவருக்கு தெரியாமலே அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். ஆள் அரவமற்ற இடத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பாய்ந்து சாந்தியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்தான் திருடன்.

அதிர்ச்சியடைந்த சாந்தி உதவி கேட்டு அலறினார். ஆட்கள் வருவதற்குள் மர்ம ஆசாமி ஓடி மறைந்து விட்டான். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் மனைவியிடமே திருடன் கைவரிசையை காட்டியது அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜனநாயக முகமூடி அணிந்த சில பாசிச சக்திகள்’.. சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கண்டனம்