Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிவேக பைக் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு.. கேரளாவில் ஒரு டிடிஎப் வாசன்..!

Advertiesment
அதிவேக பைக் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு.. கேரளாவில் ஒரு டிடிஎப் வாசன்..!
, ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (10:50 IST)
அதிவேகமாக பைக் ஓட்டுவது என்பது இன்றைய இளைஞர்களின் சாகசமாக உள்ளது என்பதும் இது அவர்களுடைய உயிருக்கு மட்டுமின்றி சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து என்பதை பலர் புரியாமல் இருக்கின்றனர் என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

சமீபத்தில் டிடிஎப் வாசன் தனது சமூக வலைதளத்தில் வேகமாக பைக்கில் சென்று சாகசம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளதால் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது  

இந்த நிலையில் டிடிஎப் வாசன் போலவே கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள மூவட்டுபுழா என்ற பகுதியில்  அன்சோன் ராய் என்ற 23 வயது இளைஞர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவி மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த இளைஞர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலைச்சரிவில் சாராய பிஸ்னஸ்; பறந்து வந்த போலீஸ் ட்ரோன்! – தெறித்து ஓடிய சாராய வியாபாரிகள்!