Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீழடியில் மூடப்படும் 54 குழிகள்: அடுத்தகட்ட ஆய்வு எப்போது?

கீழடியில் மூடப்படும் 54 குழிகள்: அடுத்தகட்ட ஆய்வு எப்போது?
, புதன், 16 அக்டோபர் 2019 (08:00 IST)
தமிழர்களின் பழமையையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகள் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது கீழடி ஆய்வு உலகப் புகழ் பெற்றுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது 5ஆம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவுற்று உள்ளதால் அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகளும் இன்று மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
webdunia
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகளில் மொத்தம் 54 குழிகள் தோண்டப்பட்டு அது குறித்து செய்யப்பட்ட ஆய்வில், செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச் சாலைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என தமிழர்களை பெருமையை பறைசாற்றும் வகையில் 800க்கும் அதிகமான சான்றிதழ் கிடைத்தது 
 
மேலும் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் என்பதும் இந்த அகழ்வாராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். மேலும் இந்த அகழ்வாய்வில் கிடைத்த ஒரு சில பொருட்கள் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த வாரம் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகள்மூடப்பட உள்ளது 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலிகள் குறித்து பேசும் தகுதியுடைய ஒரே தலைவர் வைகோ: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி