பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை என முதியவர் புகார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கம்பாடி மேல்பாக்கம் ஊராட்சியில் ஆரியூர் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவமுகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்ட போது, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முனியாண்டி என்ற முதியவர் கோரிக்கைவைத்தார் .
உடனடியாக முதிவரையும் அழைத்துக்கொண்டு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி இராமநாதபுரம் கிராமம் ஆதிதிராவிடர்காலனியில் உள்ள அவரின் வீட்டிற்கே நேரில் சென்று பார்வையிட்டு 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர். வீட்டிற்கே வந்து பார்வையிட்டதில் நெகிழ்ந்துபோன முதியவர்.