தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
மேலும் நெல்லை மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் சில மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது