Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் – முதல்வரை சாடிய கமல்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:37 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டதும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்ததை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சாடியுள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பாஜக அரசு சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அம்மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று புதுகோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவில் இலவச தடுபூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த பேச்சு தேர்தலை மையப்படுத்தி பேசுவது போல உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ‘எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே,தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். ’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments