Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானத்தில் பயணிப்பவரா? கொரோனா பரவலாம் என சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

விமானத்தில் பயணிப்பவரா? கொரோனா பரவலாம் என சர்வதேச அமைப்பு எச்சரிக்கை
, வியாழன், 22 அக்டோபர் 2020 (23:50 IST)
நீங்கள் விமானத்தில் பயணம் செய்பவரா? அப்படியென்றால் உங்களை கொரோனா வைரஸ் தாக்கும் சாத்தியம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.
 
விமானத்தில் மூடப்பட்ட அமைப்பில் பயணிகள் பயணம் செய்யும்போது தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றாலும், அந்த ஆபத்து குறைவானது என்றும் ஆறுதல் தரும் வரி, உலக சுகாதார அமைப்பு, அதன் சமீபத்திய செய்திக்குறிப்பில் உள்ளது.
 
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள தகவலில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, அவர்கள் அமர வைக்கப்படும் விதம் ஆகியவை அடிப்படையில் இந்த தொற்று எந்த அளவுக்கு பரவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து தொற்று எந்த அளவுக்கு பரவும், அதன் வீரியம் எப்படி இருக்கும் என்பதற்கான முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இது தொடர்பாக நடத்திய ஆய்வின் அடிப்படையில், விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவானது என்று கூறியுள்ளது.
 
இதேவேளை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான ஐஏடிஏ, இந்த ஆண்டு சர்வதேச அளவில் பயணம் செய்த 120 கோடி பேரில் வெறும் 44 எட்டு பேர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்தபோது தொற்று பாதிப்புக்கு ஆளானதாக தெரிவித்துள்ளது.
 
ஆனால், இந்த மதிப்பீடு மிகவும் குறைவானது என்று நோய்த்தொற்று சிகிச்சை நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள்.
 
கடந்த வாரம் ஐஏடிஏ அமைப்பு, கொரோனா தொற்று விமான பயணிகளிடம் பரவும் சாத்தியம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க நோய்த்தொற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் ஃபிரீட்மேனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அமைப்பின் மதிப்பீட்டு தரவுகளால் திருப்தியடையாத டேவிட், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
 
இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் ஓர் அறிக்கையில், விமானத்தில் பயணிக்கும்போது லண்டன்-ஹனோய், சிங்கப்பூர்-சீனா இடையே சென்ற பயணிகள் இருவருக்கு வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
 
இதற்கு தீர்வாக, கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம் என சந்தேகம் கொள்ளும் உடல் சுகவீனமான பயணிகள், விமான பயணத்தை தவிர்க்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக - குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்