Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவை இளைஞர் பலிக்கு கோபத்துடன் டுவீட் போட்ட கமல்

Advertiesment
கோவை இளைஞர் பலிக்கு கோபத்துடன் டுவீட் போட்ட கமல்
, திங்கள், 27 நவம்பர் 2017 (08:20 IST)
கோவையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட பேனரில் மோதி நேற்று அதிகாலை ரகு என்ற இளைஞர் அகால மரணம் அடைந்த துயர சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ஆளும் கட்சியை நோக்கி வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் ரகு பலியான சாலைகளில் 'Who Killed Raghu' என்ற வாசகங்களையும் பொதுமக்கள் எழுதி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கோபமான ஒரு டுவீட்டை நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்' என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபரை கோபத்தில் மிதித்த யானை (வீடியோ)